தில்லி உள்பட வட மாநிலங்களின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு நிலவும் சூழலில் பனிமூட்டமும் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தில்லியில் பரவலாக காற்றின் தரக் குறியீடு சராசரியாக 373 என்ற அளவில் பதிவாகி மிக மோசம் என்ற பிரிவில் காற்றின் தரம் நிலவுகிறது. தலைநகரின் சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் மேல் பதிவாகி தீவிரம் என்ற பிரிவில் காற்றின் தரம் நிலவுகிறது.
தில்லி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) பனிமூட்டம் அதிகரித்ததைத்தொடர்ந்து, 110 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் 370க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சராசரியாக விமானங்களின் புறப்பாடு அரைமணி நேரம் வரை தாமதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் விமான நிலைய தரவுகளிருந்து தெரிய வந்துள்ளது. தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அடர் பனிமூட்டம் காரணமாக கடந்த சில நாள்களாக விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.