ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருது வழங்கிய குடியரசுத் தலைவர் முர்மு PTI
இந்தியா

ராணுவ வீரர்களுக்கு தேநீர் கொடுத்த 10 வயது சிறுவனுக்கு பால புரஸ்கார் விருது!

ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்து உதவிய 10 வயது ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருது

இணையதளச் செய்திப் பிரிவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்து உதவிய 10 வயது ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், மே மாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது, நாள்தோறும் ராணுவ வீரர்களுக்கு சேர்ந்த ஷ்ரவன் சிங் (10) உணவுப் பொருள்கள் கொடுத்து உதவினார்.

ஷ்ரவன் சிங்

சிறுவனின் பெருமைக்குரிய இந்தச் செயலை கௌரவிக்கும்விதமாக, இன்று ஷ்ரவனுக்கு பால புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

விருதைப் பெற்ற ஷ்ரவன் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூரின்போது எங்கள் ஊர் எல்லை அருகே ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால், அவர்களுக்காக நாள்தோறும் பால், தேநீர், மோர், லஸ்ஸி கொடுத்தேன்.

இந்த விருது பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதனைக் கனவில்கூட நான் நினைத்து பார்த்ததில்லை" என்று தெரிவித்தார்.

கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் (டிச. 26) நாளில் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை வழங்கி கௌரவித்தார்.

10 Y/O Shravan Singh Receives 'Pradhan Mantri Bal Puraskar' For Service To Soliders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில் முன்னாள் விமானப் படை வீரர் சுட்டுக்கொலை!

2013 டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும்: அண்ணாமலை

2026 தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக இருக்கும் - ஜி.வி. பிரகாஷ்

”ஜனநாயகன்” படம் குறித்து கேட்கவேண்டாம்! - சரத்குமார்

2026 -ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன.20-ஆம் தேதி நடைபெறும்! - அப்பாவு

SCROLL FOR NEXT