விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி 5 முதல் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் கார்கே பேசுகையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இதன் விளைவுகளை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கலந்தாலோசிக்காமல், எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான இந்தத் திட்டத்துக்கு, இப்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து 60:40 விகிதத்தில் நிதியளிக்க வேண்டியுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
மேலும், சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை மட்டுப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட சதி என்றும் கார்கே விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.