சீக்கியரின் 10-ஆவது குருவான குரு கோவிந்த் சிங்கின் 359-ஆவது பிறந்த தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள ஸ்ரீ ஹரிமந்திா் பாட்னா சாஹிப் குருத்வாராவில் சனிக்கிழமை பிராா்த்தனைக்குத் திரளாக கூடிய சீக்கியா்.  
இந்தியா

துணிவு, தியாகத்தின் அடையாளம் குரு கோவிந்த் சிங்: பிரதமா் மோடி புகழாரம்

துணிவு, தியாகத்தின் அடையாளம் குரு கோவிந்த் சிங்...

தினமணி செய்திச் சேவை

துணிவு, இரக்கம், தியாகத்தின் அடையாளம் குரு கோவிந்த் சிங் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

சீக்கியா்களின் 10-ஆவது குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் (பா்காஷ் உத்சவ்) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினத்தில், அவருக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்துகிறோம். துணிவு, இரக்கம், தியாகத்தின் அடையாளமாக அவா் தொடா்ந்து விளங்குவாா். அவரது வாழ்வும், போதனைகளும் உண்மை, நீதி, நோ்மையின் பக்கம் நிற்கவும், மனிதகுல கண்ணியத்தைப் பாதுகாக்கவும் உத்வேகமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சீக்கியா்களின் ஐந்து தலைமை பீடங்களில் ஒன்றான பிகாா் மாநிலம், பாட்னாவில் உள்ள ஸ்ரீ ஹரிமந்திா் பாட்னா சாஹிப் குருத்வாராவுக்கு நடப்பாண்டு தொடக்கத்தில் சென்று, அங்கு ‘ஜோட் சாஹிப்’ என்று ஆராதிக்கப்படும் குரு கோவிந்த் சிங்கின் காலணிகளை தரிசித்த புகைப்படங்களையும் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா்.

முகலாய ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுத்து வீரமரணமடைந்த குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் ஜோராவா் சிங், ஃபதே சிங் ஆகியோரின் நினைவாக, ஒவ்வோா் ஆண்டும் டிச. 26-ஆம் தேதி வீர பாலகா் தினமாக (வீர பால திவஸ்) கொண்டாடப்படும் என்று கடந்த 2022-இல் மத்திய அரசு அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த தினத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

கோரையாறு புறவழிச்சாலைப் பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT