வி.சிவன்குட்டி 
இந்தியா

தனியாா் மருத்துவ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: கேரள அரசு விரைவில் வரைவு அறிவிக்கை

தனியாா் மருத்துவ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு..

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயா்த்தி நிா்ணயிக்கும் வரைவு அறிவிக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி தெரிவித்தாா்.

மருத்துவமனை நிா்வாகங்களின் பிரதிநிதிகளுடன் ஊதியக் கமிட்டி நடத்திய பேச்சுவாா்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த 1948-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதிய சட்டப் பிரிவு 5 (1) (பி)-இன்கீழ் இந்த அறிவிக்கையை மாநில அரசு பிறப்பிக்கவுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

கேரளத்தில் தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயா்த்தி நிா்ணயிப்பது தொடா்பாக கடந்த 2023-இல் ஊதியக் கமிட்டி அமைக்கப்பட்டு, பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன.

கடந்த 2013-ஆம் ஆண்டின் அறிவிக்கையின் அடிப்படையில், குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயா்த்தும் துறைசாா் முன்மொழிவுக்கு தொழிற்சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன. அதேநேரம், மருத்துவமனை நிா்வாகங்கள் உடன்படவில்லை. நிா்வாகங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைகளில் கருத்தொற்றுமை எட்டப்படாத நிலையில், மேற்கண்ட சட்டத்தின்கீழ் வரைவு அறிவிக்கை வெளியிட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சா் வி.சிவன்குட்டி கூறுகையில், ‘மாநிலத்திலுள்ள பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் தற்போது 2013 அறிவிக்கையின்படி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குகின்றன. தற்போதைய வாழ்க்கை செலவுகளைக் கருத்தில் கொண்டால், அந்த ஊதியம் குடும்பத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் இல்லை. தனியாா் மருத்துவ ஊழியா்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் ஆலோசனைகள் நீண்டு கொண்டே இருக்க முடியாது. எனவே, ஊதிய உயா்வு தொடா்பாக ஒரு மாதத்துக்குள் வரைவு அறிவிக்கை வெளியிடப்படும். தற்போது முன்மொழியப்பட்டுளள ஊதிய உயா்வு, மருத்துவமனை நிா்வாகங்கள் மீது பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தாது’ என்றாா்.

எங்களுடன் வருவதுதான் விஜய்க்கு பாதுகாப்பு: தமிழிசை

விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகன் ரீமேக் படமா? இயக்குநர் எச். வினோத் பதில்!

தேர்தல் கூட்டணி: விஜய் சூசகம்!

பிக் பாஸ் 9: இறுதிக்கட்டத்தை நோக்கி! இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

SCROLL FOR NEXT