அசாமில் போலி தங்க பிஸ்கட்டுகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாமின் கம்ருப் மாவட்டத்தில் தமுல்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த வாகனத்தை மடக்கி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாகனத்தில் இருந்து போலி தங்கம் மீட்கப்பட்டதாக ரங்கியா காவல் நிலைய அதிகாரி பிரேமன்கூர் ஹசாரிகா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரகசியத் தகவலின் அடிப்படையில், வாகனச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாகனம் ஒன்றில் இருந்து தலா 10 கிராம் 90 துண்டுகள் மற்றும் 5 கிராம் 100 துண்டுகள் என 1.4 கிலோ போலி தங்க பிஸ்கட்டுகளை மீட்டோம்.
அசாமைச் சேர்ந்தவர் இருவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனம் மற்றும் மூன்று மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.