பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.
Advertisement
Advertisement
மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது மகாகும்பமேளா நிகழ்வில் கூட்ட நெரிசலில் மக்கள் பலியான சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் குறிப்பாக சமாஜவாதி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
தொடர்ந்து அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.