இந்தியா

பட்ஜெட்: மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி!

மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

DIN

மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

"பாரத் நெட் திட்டம் மூலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இனைய வசதி உறுதி செய்யப்படும்.

மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்படும்.

அதன்படி தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும்' என்றார்.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ. 2,600 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்படும்.

முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ. 1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

சொந்த வீடுகளில் 2 வீடுகள் வரை வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 100%-ஆக உயர்த்தப்படுகிறது" என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT