சந்திரபாபு நாயுடு Center-Center-Delhi
இந்தியா

அரசியல்வாதிகள் இன்று, நாளை, எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்! சொன்னவர்?

அரசியல்வாதிகள் இன்று, நாளை, எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்று சொன்னார் சந்திரபாபு நாயுடு.

DIN

புது தில்லி : அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை, எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார்.

புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, தலைநகர் தில்லியில் முன்னேற்றமே ஏற்படவில்லை. தில்லியில் காலநிலை, அரசியல் மாசுபாடு அதிகமாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு இங்கு வாழ்வதே கவலைக்குரியதாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

புது தில்லியில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தலைநகர் வந்திருக்கும் ஆந்திர முதல்வர், தில்லியில், ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது, மக்கள் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும், தில்லியில் செயல்படும் ஆம் ஆத்மி அரசு என்பது பாதி என்ஜின் அரசுதான். இங்கு மேம்பாடு மற்றும் லட்சியங்களை அடைய இரட்டை என்ஜின் அரசுதான் தேவை. தில்லியில் வளர்ச்சியே ஏற்படவில்லை. தில்லியில் வாழும் ஏழை மக்கள் சிந்திக்க வேண்டும், நாம் நிரந்தரமாக குடிசையிலேயேதான் வாழ வேண்டுமா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும், 2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன், விக்சித் பாரத் திட்டத்தை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டு பணியாற்றுவோம் என்று கூறினார் சந்திரபாபு நாயுடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT