சிறுவன் ஷங்கு | அமைச்சர் வீணா ஜார்ஜ் 
இந்தியா

'அங்கன்வாடியில் உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - சிறுவனுக்கு அமைச்சர் பதில்!

கேரள அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் என சிறுவன் கேட்ட விடியோ வைரல்.

DIN

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்.

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற சிறுவன், 'எனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணியும் பொரித்த கோழியும் வேண்டும், அங்கன்வாடிகளில் உணவுப் பட்டியல் மாற்றப்பட வேண்டும்' என தன் தாயிடம் கேட்ட விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த விடியோவைப் பார்த்த கேரள சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சிறுவனின் கோரிக்கைக்கு பதில் அளித்து அவரும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுவன் ஷங்கு பேசிய விடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் தனது விடியோவில், 'அப்பாவித்தனமாக சிறுவன் கோரிக்கை வைத்துள்ளான், ஷங்குவின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சிறுவனின் தாய் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வணக்கங்கள்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சிறுவனின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கன்வாடியின் உணவுப் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்' என்றார்.

இந்த விடியோவுக்குப் பின்னர் சிறுவன் ஷங்குவிற்கு பலரும் பிரியாணியும் சிக்கனும் வாங்கித்டீ தருவதாக சிறுவனின் தாய் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT