அபூர்வா மகிஜா, ரன்வீர் அல்லபாடியா படம் | எக்ஸ்
இந்தியா

பெற்றோர் உடலுறவு குறித்து அவதூறு: யூடியூபர்கள் மீது வழக்கு!

பெற்றோர் உடலுறவு கொள்வது குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

பெற்றோர் உடலுறவு கொள்வது குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடன்ட் என்ற நிகழ்ச்சியில் ரன்வீர் அல்லபாடியா, அபூர்வா மகிஜா உள்ளிட்டோர் நடுவராகப் பங்கேற்றனர்.

இதில், பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லபாடியா, 'உங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்க்க விரும்புவீர்களா... அல்லது அதை நிரந்தரமாக நிறுத்துவீர்களா?' எனக் கேட்டார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரித்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் வகையிலும் மற்றவர்களை புண்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக பலர் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

இதற்கு சமூக வலைதள பிரபலமான அபூர்வா மகிஜாவும் பதில் அளித்து அதனை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். அவருக்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாஸ் காட் லேடன்ட் நிகழ்ச்சி

இதனிடையே குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரன்வீர், அபூர்வா உள்ளிட்ட யூடியூபர்கள் மீது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும், நகைச்சுவை, கேலி என்ற பெயரில் இந்தியாஸ் காட் லேடன்ட் போன்ற ஆபாச கருத்துகளைப் பரப்பும் நிகழ்ச்சிகளைத் தடைசெய்ய வேண்டும் எனவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு மனு அளித்துள்ளார்.

ரன்வீர் அல்லபாடியா, அபூர்வா மகிஜா யார்?

பீர்பைசப்ஸ் எனும் யுடியூப் சேனல் மூலம் பிரபலமான ரன்வீர் அல்லபாடியா. இவர் தனது யூடியூப் சேனல்களிலும் பாட்காஸ்ட்-களிலும் பல்வேறு அமைச்சர்களை நேர்காணல் செய்துள்ளார்.

குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய படைப்பாளிகள் விருது விழாவில், பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து 'ஆண்டின் சிறந்த டிஸ்ரப்டர்' என்ற விருதை பெற்றார்.

இன்ஸ்டாகிராமில் இவரை 45 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவரது யூடியூப் சேனலுக்கு 82.7 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

இதேபோன்று தி ரிபெல் கிட் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் அபூர்வா மகிஜா. இவருக்கு 5.2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இன்ஸ்டகிராமில் 27 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

இதையும் படிக்க | இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மிதுனம்

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!

பர்கானுடன்... ராஷி கன்னா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

SCROLL FOR NEXT