AI | X
இந்தியா

இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா!

பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகள் நிறுத்திவைப்பு

DIN

பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், இதற்காக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தலைமையில் செயல்திறன் மேம்பாட்டுத் துறையையும் புதிதாக உருவாக்கியுள்ளது.

எந்தெந்த வகைகளில் அரசின் செலவுகளை குறைக்க முடியுமோ, அவற்றையெல்லாம் இந்தத் துறை ஆராய்ந்து வருகிறது. அதன் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தி வைக்கவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு அளித்து வந்த 21 மில்லியன் டாலர் நிதியுதவியும் நிறுத்தப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதை அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

  • மொஸாம்பிக் நாட்டுக்கு மருத்துவத்துக்காக வழங்கப்பட்டு வந்த 10 மில்லியன் டாலர்

  • கம்போடியா நாட்டில் இளைஞர் திறனுக்காக வழங்கி வந்த 9.7 மில்லியன் டாலர் மற்றும் கருத்து சுதந்திரத்துக்காக வழங்கி வந்த 2.3 மில்லியன் டாலர்

  • பராகுவே நாட்டின் சிவில் சமூக மையத்துக்கு வழங்கி வந்த 32 மில்லியன்

  • செர்பியாவில் பொது கொள்முதல் திட்டத்துக்காக வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன்

  • தேர்தல் மற்றும் அரசியல் செயல்முறை வலுப்படுத்தும் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த 486 மில்லியன் டாலர் (இந்தியாவுக்கு அளித்து வந்த 21 மில்லியன் டாலர் உள்பட)

  • வங்கதேசத்தில் வலுவான அரசியலுக்கான 21 மில்லியன்

  • நேபாளத்தில் நிதி கூட்டாட்சிக்கு வழங்கி வந்த 20 மில்லியன் டாலர் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான 19 மில்லியன்

  • லைபீரியா நாட்டில் வாக்காளர் நம்பிக்கை திட்டத்துக்கு வழங்கி வந்த 1.5 மில்லியன்

  • மாலி நாட்டில் சமூக ஒற்றுமைக்காக வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன்

  • தென்னாப்ரிக்காவில் ஜனநாயகப் பணிகளுக்காக வழங்கி வந்த 2.5 மில்லியன்

  • சமூக - பொருளாதார ஒற்றுமைகளை அதிகரிக்க கொசோவோ ரோமா, அஸ்காலி, எகிப்து நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 2 மில்லியன்

  • ஆசியாவில் கற்றல் மேம்பாட்டை அதிகரிக்க வழங்கி வந்த 47 மில்லியன்

  • பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகார மையத்துக்காக வழங்கி வந்த 40 மில்லியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT