ரமலான் மாதத்தையொட்டி, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து தெலங்கானா அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரமலான் பண்டிகை இந்தாண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, மார்ச் 2 முதல் 31 வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து மாலையில் தொழுகை செய்வார்கள்.
இந்த நிலையில், தெலங்கானா அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து இஸ்லாமிய பணியாளர்களும் மார்ச் 2 முதல் மார்ச் 31 வரையிலான ரமலான் காலத்தில், மாலை 4 மணிக்கு வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது, அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் நோன்பு முடித்து தொழுகை செய்வதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில அலுவலகங்களில் தவிர்க்க முடியாத சூழலில் இஸ்லாமிய ஊழியர்கள் பணியைத் தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.