அரிதான வழக்கு: 7 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை
அரிதான வழக்காக அறிவிக்கப்பட்ட வழக்கில், 7 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு
இந்தியாஅரிதான வழக்கு: 7 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை
அரிதான வழக்காக அறிவிக்கப்பட்ட வழக்கில், 7 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில் 7 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை, அரிதிலும் அரிதான வழக்காக அறிவித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பித்துள்ளது.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 மாதப் பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அது உயிருக்குப் போராடியபோது அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளிக்கு, இது அரிதிலும் அரிதான வழக்காகக் கருதி, மரண தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், வேறு ஒரு தண்டனையை நீதிமன்றத்தால் சிந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் நீதிபதி. இந்த வழக்கில், குழந்தை உயிர் பிழைத்த போதிலும், முதல் முறையாக குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
சம்பவ நடந்து 80 நாள்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் குழந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி தாயுடன், நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கோஷ் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆர்ஜி கர் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்ற நிலையில், நிரந்தர உடல்நலப் பிரச்னைகளுடனேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.