மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கொலை மிரட்டல் வந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கோரேகான மற்றும் ஜேஜே மார்க் காவல் நிலையங்களுக்கும், தலைமையிடமான மந்தராலயாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. இதனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுடன் துணை முதல்வர்கள் அஜீத்பவார், ஏக்நாத் ஷிண்டே இருவரும் தில்லி சென்றுள்ளனர். மேலும், இம்பீரியல் ஹோட்டலில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கூட்டத்திலும் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொள்ளவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.