மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாகத் தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று காலை ரேபரேலிக்கு வந்தடைந்தார். மாநில தலைவர் அஜய் ராய் மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி வெளியிட்ட பயணத் திட்டத்தின்படி, காந்தி பச்ரவான் சட்டமன்றத் தொகுதி தொழிலாளர்களுடன் உரையாடுவார். இதைத் தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு சிவில் லைன்ஸில் உள்ள மூல் பாரதியா விடுதியில் மாணவர்களைச் சந்திக்கிறார்.
அதன்பிறகு முன்னாள் காங்கிரஸ் தலைவர் மதியம் 1 மணிக்கு உத்தர்பாராவில் உள்ள சஹ்காரி சங்க லிமிடெட்டில் நடைபெறும் பெண்கள் உரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
ஜகத்பூரின் சங்கர்பூரில் உள்ள ரணபேனி மாதவ் சிங் நினைவு கல்லூரியில் ஒரு சிலையை அவர் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.
அவரது வருகையின் போது, உன்சாஹர் மற்றும் சதார் தொகுதிகளில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் விருந்தினர் மாளிகையில் ஒரு சந்திப்பை நிகழ்த்த உள்ளார் என்று திவாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.