அம்பானி, அதானி PTI
இந்தியா

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

அஸ்ஸாமில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு! அம்பானி, அதானி போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு

DIN

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.

அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’ நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை இன்று(பிப். 25) பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இதன் தொடக்கவிழாவில் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்பட அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்று பேசினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் அஸ்ஸாமில் தங்கள் இரு குழுமங்களும் தனித்தனியே ரூ. 50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அம்பானிக்கு உற்சாக வரவேற்பு

அஸ்ஸாமில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 5 வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்யப்போவதாக ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அதேபோல, அஸ்ஸாம் மாநிலத்தில் விமான நிலையம், சிமெண்ட் தொழிற்சாலை, எரிவாயு, மின்சார திட்டங்கள் உள்பட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ. 50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் பாரதீய ஜனதா கட்சி கடந்த 2016-ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சிப்பொறுப்பேற்றது. அதனைத்தொடர்ந்து, கடந்த 9 ஆண்டுகளாக அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT