குடும்பத்தினருடன் புனித நீராடிய ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்.. 
இந்தியா

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்..

DIN

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிகழ்வின் முக்கிய விழாக்களான மகரசங்கராந்தி, மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை நிறைவு பெற்றபோதிலும் உலகெங்கிலும் இருக்கும் பக்தர் அதிகளவில் திரண்டு வந்து புனித நீராடிவிட்டுச் செல்கின்றனர். மேலும், மௌனி அமாவாசையன்று மட்டும் 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகரசங்கராந்தியன்று 3.5 கோடி பக்தர்களும் வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடினர்.

இதையும் படிக்க: பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் மிகவும் பிரசித்திப் பெற்ற இடமான திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு அவரது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “மகா கும்பமேளா என்பது நமது பழமையான பாரம்பரியம் மற்றும் வளமிக்க கலாசாரத்தின் பிரதிபலிப்பாகும். இந்திய கலாசாரம் பழங்காலத்தில் இருந்தே முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவே ஒரு வரலாற்றுச் சான்று. மேலும், மாநில மக்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் கிடைக்க பிரார்த்தனை செய்தேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை! ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT