நாடு முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் நேற்று மாலை முதலே களைகட்டத் தொடங்கியிருந்த நிலையில், புத்தாண்டு விருந்துகளுக்காக இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது.
இ-வணிக நிறுவனங்களாக பிளிங்கிட், ஸெப்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் மக்கள் நேற்று அதிகம் வாங்கிய பொருள்களின் பட்டியலில் சிப்ஸ், குளிரப்னங்கள், குடிநீர் பாட்டீல்கள், திராட்சை, ஐஸ்க்ரீம், ஆணுறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த இந்தியாவும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு தயாராகியிருந்தது தெரிய வந்துள்ளது.
ப்ளிங்கிட் நிறுவனம் மட்டும் டிசம்பர் 31ஆம் தேதி 2.3 லட்சம் ஆலு புஜியா பாக்கெட்டுகளை விநியோகம் செய்திருக்கிறது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஒரு நிமிடத்துக்கு 853 சிப்ஸ் பாக்கெட்டுகள் என்ற விகிதத்தில் விநோயகம் செய்திருக்கிறது. அதுபேல, பால், சிப்ஸ், சாக்லேட்டுகள், திராட்சை, பனீர் ஆகியவையும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
ஐஸ்க்கட்டிகள், குளிர்பானங்கள் போன்ற விருந்துக்கான பொருள்களும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இரவு 8 மணி வரை பிளிங்கிட் 6,834 ஐஸ்க்கட்டிகளை விநியோகித்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், பிளிங்கிட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், ஒரு நாளில் அதிக ஆர்டர்கள் வந்த நாளாகவும், ஒரு நிமிடத்தில் அதிக ஆர்டர்கள் வந்த நாளாகவும், ஒரு மணி நேரத்தில் அதிக ஆர்டர்கள் குவிந்த நாளாகவும், அதிக டிப்ஸ் கொடுக்கப்பட்ட நாளாகவும் டிசம்பர் 31ஆம் தேதி அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரே நாளில் அதிக சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரே நாளில் அதிக திராட்சைகள் விற்றுள்ளன என்று பதிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.