மீட்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகள். Express
இந்தியா

25 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த வீட்டில் மண்டை ஓடு, எலும்புகள்!

கேரளத்தில் 25 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து மண்டை ஓடு, எலும்புகள் மீட்கப்பட்டது பற்றி...

DIN

கேரளத்தில் 25 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொச்சி மாவட்டம், சோட்டானிக்கரை அருகேவுள்ள எருவேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பூட்டி வைக்கப்பட்டிருந்த 14 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டடுக்கு வீடு உள்ளது.

இந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பஞ்சாயத்து உறுப்பினர் இந்திரா தர்மராஜ் என்பவர் அளித்த புகாரை தொடர்ந்து, சோட்டானிக்கரை போலீஸார் திங்கள்கிழமை சோதனை செய்துள்ளனர்.

அங்குள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பழுதான பழைய குளிர்சாதனப் பெட்டியில் மூன்று பிளாஸ்டிக் பையில் மனித மண்டை ஓடு, எலும்புகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். அந்த சோதனைக்கு பிறகே எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட உடலின் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொச்சி மாவட்டம் வைட்டிலா பகுதியில் வசிக்கும் மருத்துவர் பிலீப் ஜான் (வயது 74) என்பவருக்கு சொந்தமான வீடு என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

எலும்புகள் மீட்கப்பட்ட வீடு

இதுகுறித்து விசாரணைக்கு பிலீப் ஜானுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில் உள்ள பிலீப் ஜானின் மகன்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சோட்டானிக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மூடநம்பிக்கை காரணமாக நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT