இந்தியா

தில்லியில் சூடுபிடிக்கும் தேர்தல்: பாஜக - ஆம் ஆத்மி இடையே போஸ்டர் போர்!

புது தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக - ஆம் ஆத்மி இடையே போஸ்டர் போர்!

DIN

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி - பாஜக இடையே போஸ்டர் போர் வலுத்துள்ளது.

பாஜகவின் கல்காஜி தொகுதி வேட்பாளர் ரமேஷ் பிதுரி பற்றி ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தில் வரும் அரக்க ராஜாவின் படத்துடன், முகத்தை மட்டும் ரமேஷ் பிதுரியுடையதை இணைத்து, பாஜகவின் அட்டூழியக்காரர், முதல்வர் முகம் என்று பதிவிட்டுள்ளது.

சும்மா இருக்குமா என்ன பாஜக. சொந்தமாக போஸ்டர் அடித்து ஆம் ஆத்மியை காலி செய்திருக்கிறது. ஷீஷ்மஹாலில் வசிக்கும் ஆம் ஆத்மி ராஜா, துரத்தப்பட வேண்டியவர் என்பதை தில்லி மக்கள் முடிவு செய்வார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட போஸ்டரில், மிக மோசமான கட்சியின் மோசமான வேட்பாளர் என்று வர்ணித்து போஸ்டர் வெளியிட்டிருந்தது.

அதில், பாஜகவின் மூத்த தலைவர்களான அமித் ஷா, நட்டா, ரமேஷ் பிதுரி உள்ளிட்டவர்களின் புகைப்படங்களையும், அவர்கள் சொன்ன மோசமான கருத்துகளையும் வெளியிட்டு போஸ்டர் அடித்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் ஒரு போஸ்டர் வெளியிட்டிருந்தது. இப்படி, தில்லியில் பிரசாரம் சூடுபிடித்ததோ இல்லையோ, போஸ்டர் போர் தீவிரமடைந்துள்ளது. தில்லி மக்களுக்கும், போஸ்டர் கிரியேட்டர்களின் உருவாக்கத் திறன் பிடித்திருக்கும் என்றே கூறப்படுகிறது.

தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தேர்தலும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

தீராக் கனவுகள்... கேப்ரியல்லா

கொளுத்தும் வெயில்... நேஹா மாலிக்

SCROLL FOR NEXT