சொகுசு வீடுகள் - பிரதி படம் Center-Center-Chennai
இந்தியா

2024-ல் சொகுசு வீடுகளின் விற்பனை 53% அதிகரிப்பு!

கடந்த 2024-ஆம் ஆண்டில் சொகுசு வீடுகளின் விற்பனை 53 சதவீதம் அதிகரித்திருப்பதாகத் தரவுகள் வெளியீடு

DIN

நாட்டில், வீட்டு வாடகைக்குத் திண்டாடும் மக்களுக்கு இடையே, ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளின் விற்பனை கடந்த 2024ல் 53 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலகளாவிய வணிக ரியல் எஸ்டேட் சேவைகள் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தில்லி - என்சிஆர் பகுதியில் மட்டும் 10,500 சொகுசு வீடுகள் விற்பனையாகி, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய வணிக ரியல் எஸ்டேட் சேவைகள் திரட்டிய புள்ளிவிவரத்தின்படி, சாதாரண வீடுகளைத் தவிர்த்து, ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட சொகுசு வீடுகளுக்கு கடந்த ஆண்டு அதிக தேவை இருந்துள்ளது என்றும், சொகுசு வீடுகளின் விற்பனை 53 சதவீதம் அதிகரித்து 19,700 வீடுகள் என்ற அளவில் அதுவும் முக்கியமான ஏழு நகரங்களில் மட்டும் இந்த விற்பனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில், சொகுசு வீடுகளின் விற்பனை, அதாவது ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 12,895ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, விலை கொண்ட சொகுசு வீடுகளின் விற்பனை, முந்தைய ஆண்டில் 5,525 வீடுகளாக இருந்த நிலையில், 2024ல் தில்லி-என்சிஆரில் அதிகபட்சமாக 10,500 வீடுகள் விற்பனையாகியிருந்தது.

உலகளாவிய வணிக ரியல் எஸ்டேட் சேவைகள் செயல் தலைமை நிர்வாகி, அன்ஷுமான் இது பற்றி கூறுகையில், பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் வீடுகள் மற்றும் மனை விற்பனை சந்தை இயங்குகிறது. இதே நிலை அடுத்த ஆண்டுகளும் தொடர வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT