என். சந்திரபாபு நாயுடு Center-Center-Delhi
இந்தியா

2 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி: ஆந்திர முதல்வர்

இரண்டு பிள்ளைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி..

DIN

ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று அந்த மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஒரு காலத்தில் பல பிள்ளைகளைக் கொண்ட தனிநபர்கள் பஞ்சாயத்து, உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கெண்ட தனிநபர்கள் போட்டியிட அனுமதி இல்லை.

பழைய தலைமுறையினருக்கு அதிக பிள்ளைகள் இருந்ததாகவும், தற்போதைய தலைமுறையினர் ஒரு குழந்தையாகக் குறைத்துள்ளதாகவும் இதனால் மக்கள்தொகை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை மேற்கோள் காட்டி, அந்த நாடுகள் மக்கள் தொகை வீழ்ச்சியின் ஆபத்தை உணரவில்லை, ஆனால் செல்வத்தை உருவாக்குவது, வருமானத்தை அதிகரிப்பது மற்றும் நாடுகளை முன்னேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தற்போது அந்த நாடுகளுக்கு மக்கள் தேவை அதிகரித்துள்ளது. தற்போது நாமும் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பிறப்பு விகிதம் சரிந்துள்ள தென் கொரியா, ஜப்பான் போன்ற பிற நாடுகளில் செய்த தவறுகளை இந்தியா மீண்டும் செய்யக்கூடாது. எனவே இரண்டு பிள்ளைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT