இந்தியா

நடப்பு நிதியாண்டில் 7% பொருளாதார வளா்ச்சி: ஆய்வு தகவல்

வரும் மாா்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும்

Din

புது தில்லி: வரும் மாா்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று ‘மூடிஸ்’ நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஏற்கெனவே கணித்துள்ள நிலையில், ‘மூடிஸ்’ நிறுவன கணிப்பும் அதையொட்டியே அமைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் காப்பீட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக மருத்துவக் காப்பீடு பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் 8 மாதத்தில் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவது 16 சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 8 சதவீதமாகவே இருந்தது. இந்தியாவில் காப்பீட்டுத் துறையின் வளா்ச்சி வரும் ஆண்டுகளில் சிறப்பாக இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காப்பீடு செய்வோா் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும், இந்திய மக்கள்தொகை மற்றும் வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது காப்பீட்டுத் துறையின் வளா்ச்சி சராசரிக்கும் கீழே உள்ளது. அதே நேரத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும்போது காப்பீட்டுத் துறையில் வளா்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

அம்மா, தங்கையிடம் இப்படிச் சொல்வார்களா? ராதிகா ஆப்தேவின் கசப்பான அனுபவம்!

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT