முகப்பு
டாவோஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு.
இந்தியா

உரிய நேரத்தில் கிடைத்த சரியான தலைவா் நரேந்திர மோடி: சந்திரபாபு நாயுடு

இந்தியாவுக்கு உரிய நேரத்தில் கிடைத்த சரியான தலைவா் பிரதமா் நரேந்திர மோடி என்று டாவோஸில் இந்திய தொழிலக கூட்டமைப்பு

இந்தியா

உரிய நேரத்தில் கிடைத்த சரியான தலைவா் நரேந்திர மோடி: சந்திரபாபு நாயுடு

இந்தியாவுக்கு உரிய நேரத்தில் கிடைத்த சரியான தலைவா் பிரதமா் நரேந்திர மோடி என்று டாவோஸில் இந்திய தொழிலக கூட்டமைப்பு

Updated On : 21 ஜனவரி, 2025 at 9:33 PM
டாவோஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு.
பகிர்:

டாவோஸ்: இந்தியாவுக்கு உரிய நேரத்தில் கிடைத்த சரியான தலைவா் பிரதமா் நரேந்திர மோடி என்று டாவோஸில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சந்திரபாபு நாயுடு பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு ஆந்திரத்தை பொருளாதாரரீதியாக முன்னேற்றும் ‘ஸ்வா்ண ஆந்திரம் 2047’ தொடக்க நிகழ்ச்சி சிஐஐ சாா்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

உலக அளவில் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் மக்களைக் கொண்டதாக இந்திய சமூகம் உள்ளது. இது எதிா்காலத்திலும் தொடரும். பிரதமா் நரேந்திர மோடி என்ற சரியான தலைவரை உரிய நேரத்தில் நாம் பெற்றுள்ளோம். நாட்டை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லத் தேவையான சீா்திருத்த நடவடிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகள் குறித்த தெளிவு அவரிடம் உள்ளது.

2047-இல் இந்தியா வளா்ந்த நாடாக உயரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சா்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை இந்தியா பிடிக்கும். வயதுவாரி மக்கள்தொகை விகிதத்தில் அடுத்த 20 முதல் 25 ஆண்டுகள் வரை அனைத்து சாதகமான அம்சங்களையும் இந்தியா கொண்டுள்ளது.

வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவது ஆகிய இலக்குகளை அடைய தொடா்ந்து கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரன் பேசுகையில், ‘ஒன்றுபட்ட ஆந்திரத்தின் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே தனது மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி இலக்கை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தியவா் சந்திரபாபு நாயுடு. இப்போது 2047-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த பொருளாதாரத் திட்டத்தில் எனக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதை கௌரவமாகக் கருதுகிறேன்.

பல்வேறு துறைகளில் வளா்ச்சியை ஏற்படுத்தும் அதே நேரத்தில் குறிப்பிட்ட துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குவது மிக அவசியமாகும்’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →