ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

ராகுல், மோடி, அமித் ஷாவை நேர்மையற்றவர்களாகச் சித்திரித்த ஆம் ஆத்மி!

இந்தியா கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலக காங்கிரஸ் சவால்

DIN

தில்லியில் ராகுல் காந்தி உள்பட பாஜகவினரையும் நேர்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டு ஆம் ஆத்மியினர் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

தில்லியில் பிப்ரவரி 5 ஆம் தேதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சியினரை விமர்சித்து ஆம் ஆத்மியினர் சுவரொட்டிகளை மாநிலம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அதில் பாஜகவினர் உள்பட ராகுல் காந்தியையும் நேர்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். சுவரொட்டியில் ராகுல் காந்தி உள்பட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அனுராக் தாக்கூர், வீரேந்திர சச்சதேவா, பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, சந்தீப் தீட்சித், அஜய் மக்கான் உள்ளிட்டோரின் படத்துடன் 'அனைத்து நேர்மையற்றவர்களையும் கேஜரிவாலின் நேர்மை வெல்லும்’ என்ற வாசகத்துடன் குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே, ஆம் ஆத்மியினரின் சுவரொட்டிக்கு பதிலளிக்கும் விதமாக கல்காஜி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அல்கா லம்பா கூறியதாவது, ’’அரவிந்த் கேஜரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவர் இந்தியா கூட்டணியைவிட்டு விலகுவதாக அறிவிப்பாரா? மக்களவைத் தேர்தலின்போது, கூட்டணிக்காக ஆம் ஆத்மிதான் காங்கிரஸ் கட்சியை வேண்டியது. ஆனால், தில்லியில் ஆம் ஆத்மி கூட்டணியுடன் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது தவறு. அவர்களால்தான், காங்கிரஸ் வெற்றியை இழந்தது. கேஜரிவால்தான் 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு வழங்கி விட்டார்’’ என்று தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘’பாஜகவும் ஆம் ஆத்மியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; அவர்களிடையே எந்த வித்தியாசமும் இல்லை. பாஜகவின் பி அணிதான் ஆம் ஆத்மி’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT