குற்றவாளி கிரீஷ்மா 
இந்தியா

சிறையில் எப்படியிருக்கிறார் மிக இளம்வயது மரண தண்டனைக் கைதி கிரீஷ்மா?

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளம்வயது மரண தண்டனைக் கைதி கிரீஷ்மா எப்படியிருக்கிறார் என்பது பற்றி

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தைச் சேர்ந்த ஷரோனு ராஜ் மரண வழக்கை விசாரித்த நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெளியிட்ட 586 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்தது.

இதன் மூலம், கேரளத்தில் மிக இளம் வயதில் மரண தண்டனை பெற்ற பெண் என்ற பெயரை கிரீஷ்மா பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டு கொலையில் ஈடுபட்டபோது அவருக்கு வயது 22 மட்டும்தான். அதில்லாமல், கேரளத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது பெண் என்றும், மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கைதிகளில் 40வது இடத்தில் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனையை எதிர்த்து கிரீஷ்மா உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பிருப்பதால், அவர் வழக்கமான கைதிகளுடன்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு பெண் கைதிகளுடன் கிரீஷ்மா தங்கியிருப்பதாகவும், அவருக்கு இதுவரை சிறையில் வேலை எதுவும் வழங்கப்படவில்லை. பெரும்பாலும் அவர் சிறைக்குள்ளேயே ஓவியங்கள் வரைந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீட்டுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரும் கருணை மனுவை நிராகரித்தால்தான், மரண தண்டனைக் கைதி தனி சிறையில் அடைக்கப்பட்டுத் தனியாகக் கண்காணிக்கப்படுவது வழக்கம் என்பதால், பிற கைதிகள் போலவேதான் கிரீஷ்மா நடத்தப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே ஒரு உறவினர் மட்டுமே அவரை வந்து பார்த்ததாகவும், சிறையில் கொடுக்கப்பட்ட ஆடையைத்தான் கிரீஷ்மா அணிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT