அமித் ஷா - அரவிந்த் கேஜரிவால் கோப்புப் படம்
இந்தியா

அமித் ஷாவுக்கு சொல்லிக்கொடுங்கள்.. யோகி ஆதித்யநாத்துக்கு கேஜரிவால் கோரிக்கை!

அமித் ஷாவுக்கு சொல்லிக்கொடுங்கள் என்று யோகி ஆதித்யநாத்துக்கு கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

DIN

தில்லியில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகக் குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், ரௌடி கும்பல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும்முன், தில்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவ், மாநிலத்தில், தங்களது கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் தில்லியின் சட்டம் ஒழுங்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால், தில்லியின் பாதுகாப்புக்கு முழுக்க முழுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு. ஆனால், அவரோ அரசியல் செயல்பாடுகளில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து ரௌடி கூட்டத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார். அது உண்மையென்றால், தில்லியில் கோலோச்சும் ரௌடி கும்பல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கற்றுக்கொடுகக் வேண்டும் என்று, செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

எம்எல்ஏக்களை வாங்குவதிலும், அரசுகளை கவிழ்ப்பதிலும் அரசியல் கட்சிகளை உடைப்பதிலும்தான் அமித் ஷா கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளத்தில் சா்ச்சை பதிவு: களக்காடு இளைஞா் கைது

ரூ. 10 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுத்த முன்னாள் மாணவா்கள்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: சிவசைலம் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சாதனை

களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT