PTI
இந்தியா

குடியரசு நாள் விழா: பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியத் திருநாட்டின் 76-ஆவது குடியரசு நாள் விழா இன்று...

DIN

புது தில்லி : குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ஒரு ஜனநாயக நாடாக 75 பொன்னான ஆண்டுகள் நாம் திகழுவதை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். நமது அரசமைப்பை உருவாக்கிய மேன்மைமிக்க அனைத்து மனிதர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம். ஜனநாயகத்திலும் ஒற்றுமையிலும் நமது பயணம் வேரூன்றி இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

நமது அரசமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இத்தருணம் பலப்படுத்துவதாக அமையட்டும். மேலும், செழிப்பானதொரு வலிமையான நாடாக இந்தியாவை கட்டமைக்கும் நமது முயற்சிகளுக்கும் இத்தருணம் பலத்தை தரட்டும். குடியரசு நாள் வாழ்த்துகள்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT