இருவர கைது 
இந்தியா

தில்லி: பையில் எரிந்த நிலையில் பெண் உடல்; இருவர் கைது

தில்லியில் பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது

DIN

புது தில்லி: கிழக்கு தில்லியின் காஸிபுர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிவீசப்பட்டிருந்த பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவில், இந்த பை, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றிலிருந்து வீசப்பட்டுள்ளது.

அப்பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டிருக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு, காவல்துறைக்கு இது தொடர்பாக புகார் வந்தது. விரைந்து சென்ற காவல்துறையிடலை உடலை ஆய்வு செய்தபோது, அது முற்றிலும் எரிந்திருந்தது. உடலை அடையாளம் காண முடியவில்லை.

இப்பகுதியில், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தபோது, கோன்ட்லி பகுதியிலிருந்து ஒரு கார் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த காரின் முகவரி கண்டறியப்பட்டு வருகிறது.

இதுவரை பெண்ணின் அடையாளம் தெரியவராததால், அப்பகுதியைச் சுற்றிலும், பெண் காணாமல் போனதாக வந்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT