அரவிந்த் கேஜரிவால் Center-Center-Delhi
இந்தியா

பெரு நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடியை தடை செய்யும் சட்டம் வேண்டும்: கேஜரிவால்

சாதாரண மக்களின் பிற நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏன் தள்ளுபடி செய்யவில்லை?

DIN

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடியைத் தடைசெய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால்,

ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கார்ப்பரேட் கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் செல்வந்தர்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாக மத்திய அரசை அவர் விமர்சித்தார்.

பணக்காரர்களுக்கு வழங்கப்படும் கடன்களைத் தள்ளுபடி செய்வதைத் தடுக்க நாடு தழுவிய சட்டம் இயற்ற வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் சாதாரண மக்கள் அதிகப்படியான வரிகளால் அவதிப்படுகின்றனர். ஆனால் பணக்காரரகளுக்குப் இது பயனளிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடியைத் தடைசெய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சாதாரண மக்கள் தங்களது சம்பளத்தில் பாதியை வரிகளாகச் செலுத்துகிறார்கள். அதேநேரத்தில் பணக்காரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

வீட்டுக் கடன், கார் கடன், சாதாரண மக்களின் பிற நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏன் தள்ளுபடி செய்யவில்லை?

பணக்காரர்களுக்கான கடன் தள்ளுபடியை நிறுத்துவது அரசிற்கு வருமான வரி, ஜிஎஸ்டி விகிதங்களைப் பாதியாகக் குறைக்கவும், வரி விதிக்கக்கூடிய வருமான வரம்பை இரட்டிப்பாக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டியை நீக்கவும் அனுமதிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது ஒரு பெரிய ஊழல், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன் முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்படும். கடந்த 2020ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 62 இடங்களை வென்றதன் மூலம் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கேஜரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

நந்தா பொறியியல் கல்லூரி வெள்ளி விழா இலச்சினை வெளியீடு

SCROLL FOR NEXT