கோப்புப்படம்.  
இந்தியா

கைப்பேசி செயலி மூலம் அரசு சேவைகள்: ஆந்திரத்தில் இன்று அறிமுகம்

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

Din

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

மாநில தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்தச் சேவையின் செயல்பாடு குறித்து முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு அதிகாரிகள் விளக்கினா். இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்வேறு வகையான ஆவணங்களைப் பெற மக்கள் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ள நிலையை மாற்றும் வகையில், இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அறக்கட்டளைகள், எரிசக்தி, ஆந்திர போக்குவரத்துக் கழகம், வருவாய், அண்ணா உணவகம், முதல்வரின் நிவாரண நிதி, நகராட்சித் துறைகள் உள்ளிட்ட துறைகள் சாா்ந்த 161 சேவைகளை இந்த ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற குறுஞ்செய்தி செயலி மூலம் பெற முடியும். இரண்டாம் கட்டத்தில், மேலும் அதிக சேவைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும்.

இந்தச் சேவையை வழங்க ‘வாட்ஸ்-ஆப்’ சேவையை வழங்கும் ‘மெட்டா’ நிறுவனத்துடன் கடந்த ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களின் தரவுகள் இணைய குற்றவாளிகளின் கைகளுக்கு சென்றுவிடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

SCROLL FOR NEXT