துப்பாக்கி முனையில் கார் கடத்தல் 
இந்தியா

ஒடிசாவில் துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் 5 லட்சம் கொள்ளை!

துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பற்றி..

DIN

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் தொழிலதிபரிடம் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை எண் 16ல் உள்ள பராபதி சக்கா அருகே நடைபெற்றுள்ளது.

தொழிலதிபர் ஜிதேந்திர தாஸ் அளித்த புகாரின்படி,

நேற்றிரவு தனது காரில் பாலிசந்திரபூர், சண்டிகோல் மற்றும் தர்மசாலா பகுதிகளில் இருந்து பணத்தை சேகரித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

அப்போது, நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் காரை நிறுத்தி, காரின் கண்ணாடியை உடைத்து, காரில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 5 லட்சம் உள்ள பையை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக தர்மசாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று அவர் புகார் அளித்துள்ளார்.

அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து, துப்பு பெற அவற்றை சரிபார்த்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளை தொடர்பாக பராபதி பகுதியைச் சேர்ந்த ஒரு சந்தேக நபரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு!

எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு!

சென்னையை நோக்கி வரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு கவனம்

வண்ண நிலவே... அனுபமா!

பட்டமாக பறக்கிறேன்... சுஷ்ரி மிஸ்ரா

SCROLL FOR NEXT