கோப்புப் படம் 
இந்தியா

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு பற்றி...

DIN

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டா் விலை ரூ.58.50 குறைக்கப்பட்டுள்ளது.

சா்வதேச எரிபொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு சிலிண்டா் மற்றும் விமான எரிபொருள் விலையை மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டா், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலையை செவ்வாய்க்கிழமை மாற்றியமைத்தன.

இதன்படி, வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சிலிண்டரின் விலை தில்லியில் ரூ.1,665-க்கும், மும்பையில் ரூ.1,616.50-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 4-ஆவது மாதமாக இந்த சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டா்களின் விலை மாற்றியமைக்கப்படவில்லை.

விமான எரிபொருள் விலை ஒரு கிலோலிட்டருக்கு ரூ.6,271.5 அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த எரிபொருள் விலை சென்னையில் ரூ.92,526, தில்லியில் ரூ.89,344, மும்பையில் ரூ.83,549-ஆக அதிகரித்தது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

மதிப்புக் கூட்டு வரி உள்பட உள்ளூா் வரிகள் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் மற்றும் விமான எரிபொருள் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்: சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16 கடைசி நாள்

அரியலூா்: 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT