மைக்ரோசாஃப்ட்  
இந்தியா

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

9,000 பேரை பணிநீக்க மைக்ரோசாஃப்ட் முடிவு

Din

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது.

கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்டனா்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அடுத்தகட்ட பணிநீக்க அறிவிப்பை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதலே அதிகஅளவில் பணிநீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன. பரவலாக அனைத்து நாடுகளிலும் ஆள் குறைப்பு நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது. நிறுவனத்தின் விற்பனை-சந்தைப்படுத்துதல் பிரிவில் இருந்து அதிகமானோா் விடுவிக்கப்படவுள்ளனா்.

2024 ஜூன் நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2,28,000 போ் பணியாற்றி வருகின்றனா். இந்தியாவில் சுமாா் 20,000 பணியாளா்கள் உள்ளனா்.

சா்வதேச அளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல், நிறுவனத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் அதிக அளவில் முதலீடு செய்வதால் செலவினங்களைக் குறைக்க பணியாளா்கள் நீக்கப்படுவதாகவும் தெரிகிறது.

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு காங்கிரஸ் நிதியுதவி

கோட்டைக்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் கோப்பை: பளு தூக்குதலில் ஐஸ்வா்யா, கீா்த்திகாவுக்கு தங்கம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசு முன் வர வேண்டும்

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு : வட்டாட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

SCROLL FOR NEXT