விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 100 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை இழுத்து கடலில் வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புடிமடக்கா என்றப் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் சொடப்பள்ளி எரய்யா என்ற மீனவர், ஆந்திர வடக்கு கடல் எல்லை 20 நாடிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
புதன்கிழமை காலை, எரய்யா, மேலும் மூன்று மீனவர்களுடன் படகில் மீன்பிடித்துக கொண்டிருந்தார். அப்போது வலையில் சிக்கிய மீனை படகுக்குள் இழுத்தபோது, வலையில் இருந்த கொம்மு கோணம் அல்லது கருங்கொப்பரான் என அறியப்படும் நீண்ட வாய்ப் பகுதியைக் கொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை ஆக்ரோஷமாகத் தாக்கி கடலில் இழுத்துத் தள்ளியது.
படகில் இருந்த மற்ற மூவரும் உதவி கோரியதைத் தொடர்ந்து விரைந்து வந்த மற்ற மீனவர்கள், கடல் முழுவதும் தேடியும், எரய்யா எங்கும் கிடைக்கவில்லை.
காணாமல் போன எரய்யாவைத் தேடும் பணியை கடலோரக் காவல்படையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுபோன்று, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் மீனவரை மீன் தாக்கிக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.