பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!
பிரமோஸ் ஏவுகணைப் பற்றி பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் கூறியது பற்றி...
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா ஏவிய பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற வெறும் 30 நொடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா உள்ளூர் ஊடகத்துக்கு வியாழக்கிழமை பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியபோது, அதில் அணு ஆயுதம் உள்ளதா என்பதை பகுப்பாய்வு செய்ய பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெறும் 30 - 45 நொடிகளே இருந்தது.
30 நொடிகளில் பகுப்பாய்வு செய்து எதிர்வினையாற்றுவது என்பது மிகவும் ஆபத்தான சூழல். ஏனெனில், அணு ஆயுதப் போராக மாறியிருக்கும்.
அணு ஆயுதங்கள் பயன்படுத்தாததால் இந்தியா நல்லது செய்துள்ளது எனக் கூறவில்லை, எதிர் தரப்பினர் தவறாக புரிந்துகொண்டிருந்தால் அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான முதல் ஆயும் ஏவப்பட்டிருக்கலாம்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் தவித்தது. மேலும், போரில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய ஆயுதங்களையும் உபகரணங்களையும் மீறி, பாகிஸ்தானின் ராணுவ இலக்குகளை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கின.
பாகிஸ்தானின் பல்வேறு விமானப் படைத் தளங்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஓடுதளங்கள், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
During the Operation Sindoor attack, Pakistan had just 30 seconds to react to the Brahmos missile launched by India, said Rana Sanaullah, advisor to the Prime Minister.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.