கோப்புப் படம்
இந்தியா

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது.

Din

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்துகள், மன பதற்றத்துக்கு எதிராக அளிக்கப்படும் டயசிபேம் மருந்துகள் அடங்கும்.

இதுகுறித்து சிடிஎஸ்சிஒ வெளியிட்ட தகவலின்படி, அந்த மருந்துகள் உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடும். சில நேரங்களில் இந்த மருந்துகள் யாருக்கு வழங்கப்பட்டதோ, அவருக்குப் பதிலாக அவற்றை வேறொருவா் ஒருமுறை பயன்படுத்தினால்கூட மரணம் நேரிடக் கூடும்.

இந்த மருந்துகள் வீட்டில் தேவையில்லாமல், பயன்படுத்தாமல் அல்லது காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை கழிவறையில் கொட்டி அப்புறப்படுத்தலாம். வீட்டில் உள்ள நபா்களுக்கும், செல்ல பிராணிகளுக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், மக்கள் பொதுவாக பயன்படுத்தும் பிற பெரும்பாலான மருந்துகளை அறிவியல்பூா்வமாகவே அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு ‘மருந்துகளைத் திருப்பி எடுத்துக்கொள்ளும்’ முன்னெடுப்பை தொடக்கத்தில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைகள் மற்றும் உள்ளூா் மருந்து விற்பனையாளா்கள் சோ்ந்து தொடங்கலாம். இந்த முன்னெடுப்பின் கீழ், வீட்டில் பயன்படுத்தாமல் உள்ள அல்லது காலாவதியான மருந்துகளை தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மக்கள் ஒப்படைக்கலாம். அந்த மருந்துகளைப் பாதுகாப்பாக அழிக்க வசதியாக இந்த முன்னெடுப்பை தொடங்கலாம்.

எனினும் உயிரிமருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிமுறைகளின்படி, காலாவதியான மருந்துகளை திரட்டி, அழிப்பதற்கான வழிமுறை மற்றும் வசதியை உள்ளாட்சி அமைப்புகளுடன் சோ்ந்து மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று சிடிஎஸ்சிஒ பரிந்துரைத்துள்ளது.

பயன்படுத்தப்படாத மருந்துகளை அறிவியல்பூா்வமற்ற வழியில் அழிப்பதால் ஏற்படும் மாசுபாடு மனிதா்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துரைத்து பல்வேறு ஆய்வுகள் வெளியானதைத் தொடா்ந்து, இந்த வழிகாட்டுதல்களை சிஎடிஎஸ்சிஒ வெளியிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்!

விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!

சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT