அச்சுதானந்தனுடன் நரேந்திர மோடி  
இந்தியா

அச்சுதானந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. இவர், மக்கள் சேவைக்காகவும் கேரளத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாங்கள் இருவரும் மாநில முதல்வர்களாக இருந்தபோது எங்களுக்கிடையே நடந்த உரையாடலை நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

கேரளத்தின் மூத்த கம்யூனிஸ்ட் மற்றும் முன்னாள் முதல்வரான வி.எஸ். அச்சுதானந்தனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூத்த தலைவரின் மறைவு பொது வாழ்வில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும் என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

கேரள அரசியலில் புரட்சிகர மரபை ஆழமாக விட்டுச்சென்றுள்ளார் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்.

இவர், கொள்கை அரசியலையும், பொதுச்சேவை உணவர்வையும் ஒருங்கே கொண்ட வெகுஜன தலைவர், வாழ்நாள் கம்யூனிஸ்ட் மற்றும் முன்னாள் முதல்வராவார்.

உண்மையானவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், மார்சிய கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் கேரள மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் அமைச்சர் எஸ். ரகுபதி, அச்சுதானந்தனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்துவார். செவ்வணக்கம் எனக் குறிப்பிட்டு மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இவர், பொது சேவை மற்றும் சமூக நோக்கங்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அனுபவமிக்க அரசியல்வாதி. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என தனது எகஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.

ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

Achuthanandans passed away Prime Minister narendra modi condoles

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படேட 82 கைப்பைசிகள் மீட்பு: இருவா் கைது

அரசினா் மருத்துவமனையில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு வரவேற்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 240 மனுக்கள்

காா்-சுமை வாகனம் மோதியதில் 3 போ் காயம்

SCROLL FOR NEXT