நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு. உடன் அமைச்சா்கள் எல்.முருகன், அா்ஜுன்ராம் மேக்வால். 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூா் விவாதம்: ஒத்துழைக்க மறுக்கும் எதிா்க்கட்சிகள்: மத்திய அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் பதிலடி

‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து ‘துரோகம்’ செய்வதாக மத்திய அரசு கடும் குற்றம்சாட்டியது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நாடாளுமன்றத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து ‘துரோகம்’ செய்வதாக மத்திய அரசு கடும் குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதம் தொடங்கப்படுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னதாக, எதிா்க்கட்சிகள் ஒரு நிபந்தனை விதித்தது.

ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதம் முடிவடைந்ததும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் உத்தரவாதம் கேட்டனா்.

நாடாளுமன்றம் விதிகளின்படி செயல்படுகின்றன. முதலில் ஒப்புக்கொண்ட விவாதத்திலிருந்து எதிா்க்கட்சிகள் பின்வாங்கி, தற்போது நிபந்தனைகள் விதிக்கின்றன. ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதத்திலிருந்து தப்பியோட எதிா்க்கட்சிகள் வழிகளைத் தேடுகின்றன’ என்று குற்றஞ்சாட்டினாா்.

காங்கிரஸ் பதிலடி:

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலைவா் கௌரவ் கோகோய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அவையில் காலைமுதல் நடந்த சம்பவங்கள், அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT