உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத். 
இந்தியா

உ.பி. வரலாற்றில் புதிய சாதனை படைத்த யோகி ஆதித்யநாத்! 8 ஆண்டுகள், 4 மாதங்கள்!

முதல்வராக பதவியேற்று 8 ஆண்டுகள், 4 மாதங்கள், 10 நாள்கள் ஆன நிலையில் உ.பி. வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் யோகி ஆதித்யநாத்.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வரலாற்றில், முதல்வர் யோகி ஆதித்யநாத், மிக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

திங்கள்கிழமையுடன், அவர் உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்று 8 ஆண்டுகள், 4 மாதங்கள், 10 நாள்கள் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக கோவிந்த வல்லப் பந்த், 8 ஆண்டுகள் 127 நாள்கள் முதல்வராக இருந்ததே இதுவரை சாதனையாக இருந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர் கோவிந்த வல்லப் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி ஆதித்யநாத், தொடர்ந்து இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை வகித்து வருகிறார். இவர் முதல் முறையாக 2017ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தபோது முதல்வராக பதவியேற்றார். அதற்கு முன்பு அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தார். இந்த தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றிருந்தது.

2022ஆம் ஆண்டு பாஜக மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது. அந்த மாநிலத்தின் வரலாற்றிலேயே, ஆண்ட கட்சியே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது அதுவே முதல் முறை. அப்போது, யோகி ஆதியநாத் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT