இந்தியா

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் சுமுகமாக நடைபெற்ற கேள்வி நேரம்

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் இடையூறின்றி சுமுகமாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் இடையூறின்றி சுமுகமாக நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை.

இதனிடையே, எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க ஆபரேஷன் சிந்தூா் குறித்து மக்களவையில் 16 மணிநேர சிறப்பு விவாதம் திங்கள்கிழமை பிற்பகலில் தொடங்கியது. அன்றைய தினம் காலை நேர அமா்வில், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் விவாதம் நடத்த மத்திய அரசு உறுதியளிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில், 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மக்களவையில் கேள்வி நேரம் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதில் இருந்து மக்களவையில் கேள்வி நேரம் சுமுகமாக நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT