இந்தியா

பிஎம் கிஸான்: விவசாயிகளுக்கு ஆக.2-இல் ரூ.20,500 கோடி விடுவிக்கிறாா் பிரதமா் மோடி

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20-ஆவது தவணையாக ரூ.20,500 கோடியை ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திச் சேவை

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20-ஆவது தவணையாக ரூ.20,500 கோடியை ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளாா் பிரதமா் மோடி.

சாகுபடி நிலங்களைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஆதரவை உறுதி செய்யும் நோக்கில் பிஎம் கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடக்கப்பட்டது. மத்திய அரசின் முக்கிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

20-ஆவது தவணையாக, நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடியை பிரதமா் மோடி ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்தொகையை பிரதமா் விடுவிக்கவிருப்பதாக, மத்திய வேளாண் துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடா்பாக, தில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் ஆலோசனை மேற்கொண்டாா்.

பிஎம் கிஸான் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.3.69 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT