சிக்கிம் நிலச்சரிவு PTI
இந்தியா

சிக்கிம் நிலச்சரிவு: மாயமான வீரர்களைத் தேடும் பணி தீவிரம்! களமிறங்கியது தேசிய படை!

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி மாயமான ராணுவ வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

DIN

சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த ராணுவ முகாமில், மாயமான வீரர்களைத் தேட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், சிக்கிமின் லாச்சென் மாவட்டத்தில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் முற்றிலும் மண்ணுக்குள் புதைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில், 3 ராணுவ வீரர்கள் பலியான நிலையில் 4 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், மாயமான 6 வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 23 வீரர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் செயற்கைகோள் செல்போன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இப்படையின் வீரர்கள் மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுவதுன், தற்காலிக தொடர்புகளை உண்டாக்கும் பணிகளிலும் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மணிப்பூரில் வெள்ளம்: 56,000 பேர் பாதிப்பு; 10,477 வீடுகள் சேதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT