நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் தில்லியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 564 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 4,302 ஆக இருந்தது. கரோனா பாதித்தவர்களில் மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளத்தில் புதிதாக 114 பேர், கர்நாடகத்தில் 112 பேர், தில்லியில் 105 பேர், மேற்கு வங்கத்தில் 106 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது அதிகரித்தாலும் கரோனா பாதித்து காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.