இந்தியா

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது நேற்று(ஜூன் 5) மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளாத பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் உள்பட 5 உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சித்தராமையா, கூட்ட நெரிசலைத் தொடர்ந்து கூடுதல் காவல் ஆணையர், சின்னசாமி கிரிக்கெட் திடல் பொறுப்பாளர், காவல் நிலைய அதிகாரி, காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் கப்பன் பூங்கா காவல் நிலையப் பொறுப்பாளர் ஆகியோர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க முன்னாள் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ஆர்சிபி அணியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கைது செய்யவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT