X | Rahul Gandhi
இந்தியா

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

DIN

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்பனை 8.6 சதவிகிதமும், மொபைல் சந்தை 7 சதவிகிதமும் குறைந்துள்ளது. ஆனால், மறுபுறமோ செலவுகள் மற்றும் கடன் ஆகிய இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

வீட்டு வாடகை, வீட்டு பொருள்களுக்கான பணவீக்கம், கல்விச் செலவு உள்பட கிட்டத்தட்ட அனைத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இது வெறும் புள்ளிவிவரங்களோ எண்களோ அல்ல. இது ஒவ்வோர் இந்தியரும் அனுபவிக்கும் பொருளாதார அழுத்தத்தின் உண்மை நிலைமை.

ஒருவரின் சரியான கேள்விக்கு பொறுப்புடன் பதிலளிக்கும் அரசியலே நமக்கு தேவை. தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளிகளுக்கு மட்டும் அல்ல பொருளாதாரம்; அனைத்து இந்தியர்களுக்காகவும் வேலை செய்யும் பொருளாதாரமே நமக்கு தேவை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

மண் அல்ல, பொன்!

SCROLL FOR NEXT