கோப்புப் படம் 
இந்தியா

நாட்டில் தொடரும் கரோனா பரவல்! தில்லியில் புதியதாக 30 பேருக்கு பாதிப்பு!

தில்லியில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

DIN

புது தில்லியில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சுமார் 5,364 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் புது தில்லியில், தற்போது புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜூன் 6) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, கரோனா பாதிப்பில் கேரளம், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. இதனால், கரோனா பாதிப்புக்கு தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு சார்பில் ஒத்திகைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைச் சமாளிக்க, படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ வசதிகள் உள்ளதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும்: ராகுல் காந்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“G20 Leaders Summit 2025” பிரதமர் மோடியை வரவேற்ற தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா!

அஞ்சான் மறுவெளியீட்டு டிரைலர்!

14 மாதங்களாக சரிவை நோக்கி ஏற்றுமதி: கிரிசில்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தங்கச் சரிகைச் சேலை எங்கும் பளபளக்க... திஷா பதானி!

SCROLL FOR NEXT