புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை 
இந்தியா

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

ஒடிசாவில் கரோனா ரத யாத்திரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

DIN

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.

நாட்டை அச்சுறுத்திவந்த கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், கரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றது. நாட்டில் கரோனா பாதிப்பு இதுவரை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒடிசாவில் 15 பேர் தொற்றியிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தம் 34 பேர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

புரி ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை திருவிழா ஜூன் 27ஆம் தேதி முதல் நிகழவுள்ள நிலையில், ரத யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டு வருவதாகவும் அதேசமயம் கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் ஜூன் 20 முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளதால் , கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க பள்ளிகள் செயல்படும் என்று கல்வி அமைச்சர் நித்யானந்தா கோண்ட் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

SCROLL FOR NEXT