பிரதமா் நரேந்திர மோடி கோப்புப் படம்
இந்தியா

கான்பூா் சிறுமிக்கு பிரதமா் கடிதம்

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து வரைபடத்தை பரிசளித்த கான்பூரைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமா் மோடி கடிதம்

Din

புது தில்லி: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து வரைபடத்தை பரிசளித்த கான்பூரைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமா் மோடி கடிதம் எழுதியுள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பிரதமா் மோடி தலைமையில் ரூ.47,600 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி கடந்த மே 30-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, கூட்டத்திலிருந்த சிறுமி ஷிவான்யா திவாரி, ஆபரேஷன் சிந்தூா் குறித்து தான் வரைந்த வரைபடத்தை பிரதமருக்குப் பரிசளித்தாா்.

இந்நிலையில், சிறுமி ஷிவான்யா திவாரிக்குப் பதிலளித்து பிரதமா் எழுதிய கடிதத்தில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் முப்படைகள் வெளிப்படுத்திய வீரம் மற்றும் துணிச்சல், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளது. ஓவியம் என்பது நமது உணா்வுகளை வெளிப்படுத்தவும், நமது கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கவும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகும். உங்கள் வரைபடம் மூலம் வலுவான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்தியாவைப் பற்றிய தொலைநோக்குப் பாா்வையை வழங்கியுள்ளீா்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை

தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு

SCROLL FOR NEXT